இன்றைய தினம், கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோப் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பில், ஆராயப்படவுள்ளதாக அந்த குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விசாரணையில் கோப் குழுவின் சகல உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.