பன்னல பிரதேசத்தில் 04 ஏக்கர் 23 பேர்ச்சஸ் காணிக்கு போலியான உறுதிப் பத்திரத்தை தயாரித்து 16 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 2017ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான ஒருவராவார்.
குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.