ஜனாதிபதி இந்த வரவு செலவுத் திட்டத்தை மிகவும் கடினமான நிலையில் இருந்து சமர்ப்பித்துள்ளார் எனவே நாம் பாசாங்குத்தனமாக இருக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நேற்று (13) தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு கடுமையான மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாட்டைப் பிணைக்கும் சங்கிலிகள் உடைக்கப்பட வேண்டும்.
அவர்களில் பெரும்பாலானவர்கள், அதாவது 90 சதவீதம் பேர் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் அதிகரிக்க முடியும். இந்த வரவு செலவுத் திட்ட உரையில் இருந்து அடுத்த ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதை உறுதியாக அறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.