40,000 மெட்ரிக்தொன் தரமற்ற டீசல் கையிருப்பு சந்தைக்கு வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 5 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும், கொலன்னாவ முனையத்தில் இந்த குறிப்பிட்ட டீசல் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
டீசல் கையிருப்பின் மாதிரிகளில் இரண்டு LIOC ஆய்வக சோதனை அறிக்கையில் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.