fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2023 14:17

நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது

நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பிரதேசவாசிகள் மற்றும் அப்பகுதி வீதிகளில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 17,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகின்றது.

இதனால் அடுத்த சில மணித்தியாலங்களில் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, ஹலவத்தை, ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2023 14:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க