அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை
Related Articles
இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய, வட மாகாணத்தில் அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வானது, யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன், அன்றைய தினம் வடமேல் மாகாணத்திற்கான நியமனம் குருநாகலில் உள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்திலும், சப்ரகமுவ மாகாணத்திற்கான அதிபர் நியமனம் கலவான தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன.
அதேநேரம், தென் மாகாணத்திலும், வடமத்திய மாகாணத்திலும், எதிர்வரும் 4ஆம் திகதி புதிய அதிபர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஊவா மாகாணத்திற்கான அதிபர் நியமனம் வழங்கும் நிகழ்வு பதுளை நூலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கான அதிபர் நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இந்த மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அத்துடன் மத்திய மாகாணத்திற்கான அதிபர் நியமனம், கண்டி தர்மராஜ வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.