fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க துப்பாக்கிச் சூடு – அடையாளம் காணப்பட்ட கொலையாளி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2023 11:13

அமெரிக்க துப்பாக்கிச் சூடு – அடையாளம் காணப்பட்ட கொலையாளி

அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (25) இரவு உணவகம், விளையாட்டுப் ஒழுங்கை உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இறந்தவர்களைத் தவிர, கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இராணுவத்தினரால் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என தகவல் வெளியாகியுள்ளதாக அந்த நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லெவிஸ்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2023 11:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க