தலவாக்கலைக்கும், வட்டகொட ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ரயிலை தடம் ஏற்றும் பணிகள் இன்று இரவுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது