fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனைவியை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த கணவன் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2023 09:51

மனைவியை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த கணவன் கைது

முல்லைத்தீவு – முள்ளியவளையில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால்  நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

முள்ளியவளை – நீராவிப்பிட்டியில் வசித்த தனது மகள், மருமகனை தொடர்புகொள்ள முடியாதிருந்த மகளின் தாயார், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.
எனினும், எவ்வித தகவலும் கிடைக்காததால் குறித்த தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவரை ​வெல்லம்பிட்டிய பகுதியில் நேற்று காலை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் தனது மனைவியை கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில், அவர்கள் வசித்த வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலம் நேற்று மாலை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக முள்ளியவளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண்ணை அவரது கணவர் கொலை செய்து புதைத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2023 09:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க