முச்சக்கர வண்டி எதிர்த் திசையில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி
Related Articles
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மினுவாங்கொடையில் இருந்து விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி எதிர்த் திசையில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் பின் இருக்கையில் பயணித்த இளைஞரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
19 மற்றும் 25 வயது இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.