மண்சரிவு அபாயம் காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள 99 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்களை வெளியேற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவர்கள் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொஸ்லந்த, ஹல்துமுல்ல பிரதேசத்தில் மண்சரிவில் 16 பேர் உயிரிழந்தனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் பிரதேசவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 119 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக நிலையம் தெரிவித்துள்ளது.