பொலிஸ் உயர் அதிகாரிக்கு மன்னா ரமேஷினால் கொலை மிரட்டல்
Related Articles
வெளிநாட்டில் இருந்தவாறு அவிசாவளை பிரதேசத்தில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த “மன்ன ரமேஷ்” என அழைக்கப்படும் ரமேஷ் பிரிஜனக அவிசாவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன ஜயலத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
குற்றச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மன்னா ரமேஷுடன் நெருக்கமாக இருந்த மகேஷ் தனஞ்சய அண்மையில் உயிரிழந்தமையை அடிப்படையாக கொண்டு இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னா ரமேஷ், தலைமை பிரதான பொலிஸ் பரிசோதகரை தொலைபேசியில் அழைத்து, “எனது பிள்ளைக்கு ஒப்பான ஒருவனைக் கொன்றுவிட்டாய் என்று தெரிந்துகொள். இதற்கு நீயும் உன் பிள்ளையும் பதில் கூற தயாராக இருங்கள். இருவரையும் சுட்டுக் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டினார்.
மன்னா ரமேஷின் பாதாளச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்டோரை பிரதான பொலிஸ் பரிசோதகர் .பிரசன்ன ஜயலத் ஏற்கனவே கைது செய்துள்ளதுடன், இந்த மரண அச்சுறுத்தல் தொடர்பில் சீதாவக்க பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.