உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தர்மசாலாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணிசார்பில் துடுப்பாட்டத்தில் Daryl Mitchell அதிகபட்சமாக 130 ஓட்டங்களை பெற்றதுடன் Rachin Ravindra 75 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mohammed Shami 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 95 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் ரோஹித் சர்மா 46 ஓட்டங்களையும் Ravindra Jadeja ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Lockie Ferguson 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி நியூசிலாந்து அணி இந்த தொடரில் முதலாவது தோல்வியை சந்தித்துள்ளது.
அதேநேரம் இந்த வெற்றியுடன் இந்திய அணி உலக கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதுடன் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.