fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் – கனடா பிரதமர்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2023 16:01

இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் – கனடா பிரதமர்

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா, இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம்சாட்டியது.  இந்த விவகாரத்தில்
இருந்து இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப்
பெற்றுள்ளது.  இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

தங்கள் நாட்டினருக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், “இந்தியாவில் பயங்கரவாத அச்சுசுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்”
எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “இருநாட்டு உறவு , மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுபூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

கனடா எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் உள்ளிட்ட ஆர்பாட்டங்கள் நடைபெறலாம்.  ஒருவேளை கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்.
டெல்லியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கவும். தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மும்பை, சண்டிகர்,  பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் கனடா நாட்டினர் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். பிக்பாக்கெட், சிறிய காயம் போன்ற சம்பவங்கள் பொதுவானது. குற்றவாளிகள் வெளிநாட்டினரை இலக்காக வைத்து தாக்கலாம். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில்

இதுபோன்று நடக்கலாம் என எச்சரித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2023 16:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க