fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காணாமல் போன மகள் தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடும் தாயார்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2023 14:10

காணாமல் போன மகள் தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடும் தாயார்

ஜா-எல, ஏக்கல, கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கோஷிலா ரோஷேன் என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.

கடந்த 8ம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறினார்.

குறித்த யுவதி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறுவது வீட்டின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய்,

“அவளைப் பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை. தொடர்ந்தும் காத்திருக்க முடியாமல் தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம். யாராவது எனது மகளைப் பார்த்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2023 14:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க