மின்கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து பேக்கரி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை திருத்துவது தொடர்பில் பரிசீலிக்க உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
மின்சார கட்டண திருத்தத்தை தொடர்ந்து பல காரணிகளை கருத்திற்கொள்ள வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலை தொடர்ந்து விலை திருத்தம் செய்யும் முறை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியது.