fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2023 12:47

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில்

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (19) மாலை தலவாக்கலை நகரிலுள்ள ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்து தலவாக்கலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, ​​கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை, நிறுவன ஊழியர்களுக்கு விஷமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2023 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க