கொத்தமல்லி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் 11.460 கிலோ பீடி இலைகள் காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வரித் தொகையாக கொள்கலன்களுக்கு 70 மில்லியன் ரூபா வசூலிக்க வேண்டும், இருப்பினும் கொத்தமல்லி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்டதால் 300,000 ரூபா அறவிடப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளின் அசாத்திய திறமையினால் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எவ்வாறாயினும், நன்கு அறியப்பட்ட நிபுணர் ஒருவர் கொள்கலன்களை விடுவிப்பதற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வருவாயை அதிகரிப்பதில் அதீத அர்ப்பணிப்புடன் செயற்படும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பு முடிந்தவரை உறுதிப்படுத்தப்படும் என அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.