லங்கா சதொச நிறுவனம் 5 உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்
Related Articles
லங்கா சதொச நிறுவனம் 5 உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 ரூபாவாகும்.
உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை ரூ.5 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.545 ஆக உள்ளது.
ஒரு கிலோ பச்சை பயறு 20 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.
ஒரு கிலோ நெத்தலியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாவாகும்.
ஒரு கிலோ கொத்தமல்லியின் புதிய விலை ரூ.540 ஆகும் , அதன் விலை ரூ.10 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.