தீபாவளி கொடுப்பனவை அதிகரிக்குமாறு திகாம்பரம் கோரிக்கை
Related Articles
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி கொடுப்பனவை 20,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்திடம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி கொடுப்பனவை 15,000 ரூபாவில் இருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்குமாறு பழனி திகாம்பரம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ள நிலையில், குறித்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் ஆராயுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக தானிய வகை, சீனி, எண்ணெய், மரக்கறி, மீன், கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தீர்வாக இந்த கொடுப்பனவை இம்முறை அதிகரித்து வழங்குமாறு குறித்த கடிதத்தினூடாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.