ஜோ பைடன் தலைமையில் ஜோர்தானில் நடைபெற உள்ள சிறப்பு மாநாடு ரத்து
Related Articles
இஸ்ரேல் ஹமாஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் ஜோர்தானில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டை, ஜோர்தான் மன்னர் அப்துல்லா மாநாட்டை இரத்து செய்துள்ளார்.
ஏனெனில் காஸா பகுதியில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
ஜோர்டான் இஸ்ரேலுக்கு நட்பு நாடாகவும் அயல் நாடாகவும் காணப்படுகின்றது.
இஸ்ரேலிய ஹமாஸ் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜோர்தானில் பலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அல்-சிசி ஆகியோரை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மன்னர் அப்துல்லாவின் ஆதரவுடன் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.