சிங்கப்பூரின் ஊடக அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் முக்கியத்துவத்தை உத்வேகப்படுத்தி, பொதுமக்களின் துல்லியமான தகவல்களைப் பெறுவதை உறுதிசெய்து, இலங்கையின் உலகளாவிய தரத்தை உயர்த்துவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடக சுதந்திரத்தை அனைவரும் அனுபவிக்கும் அதே வேளையில், அதன் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.