அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்
Related Articles
இன்று (16) மற்றும் நாளை (17) அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் அந்த அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அன்றைய தினம் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்திப்பை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் மற்றுமொரு நாளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.