நீண்ட காலத்தின் பின்னர் மகாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியானது, டிசம்பர், மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் ஜா-எல மாநகர சபை விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
வருடமொன்றுக்கு 64 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்வி கற்கும் சுமார் 1,500 மாணவர்களுக்கும் மகாபொல நம்பிக்கை நிதியத்தின் ஊடாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
மகாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்கினால் மகாபொல உதவித்தொகையை அதிகரிக்க முடியும் என வர்த்தக அமைச்சர்நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.