ஹப்புத்தளை நகரில் திடீர் வாகன சோதனை
Related Articles
பதுளை மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் வாகன பரிசோதகர் தலைமையில் நேற்று ஹப்புத்தளை நகரில் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இதன் போது 49 வாகனங்களை செலுத்துவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இச் சோதனையின் போது கனரக வாகன சாரதி ஒருவரது சாரதி அனுமதிப்பத்திரம் போலியானதென கண்டறியப்பட்டதுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.