ஜனாதிபதி இன்று GMOA மற்றும் FUTA உறுப்பினர்களை சந்திக்கிறார்
Related Articles
நிதி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ( FUTA) பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள GMOA உடனான சந்திப்பின் போது, வரி திருத்தங்கள், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், நாட்டை விட்டு வெளியேறும் வைத்திய நிபுணர்கள் மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது குறித்து இந்த பேச்சுவார்த்தை மையமாக இருக்கும்.
இதேவேளை, பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி FUTA பிரதிநிதிகளை சந்தித்து பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள், வரி குறைப்பு மற்றும் விரிவுரையாளர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.
22 மில்லியன் இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ள நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தவுள்ளார்.