4 ஆண்டுகளுக்கு முன்னர் 80 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டு பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமது கட்சிகாரர் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்வதாக பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய சந்தேகநபர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர்களை தங்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.