மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு அபாய வலயங்கள் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
Related Articles
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக, முக்கியமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு அபாய வலயங்கள் காணப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பிலியந்தலை, மொரட்டுவ, களனி, தொம்பே, ராகம, அத்தனகல்ல, கம்பளை, உடுநுவர, குண்டசாலை, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்கள் டெங்கு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
வரட்சியான காலநிலையால் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த வருடம் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65,479 ஆகவும், மேல் மாகாணத்தில் 50 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இலங்கையின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதன்படி,நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அது டெங்கு என சந்தேகிக்கப்படும் நிலையில், மருத்துவ உதவியை நாட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.