இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Related Articles
இஸ்ரேலிய மக்கள் தொகை, குடியேற்ற அதிகாரசபை மற்றும் வௌியுறவு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட பின்னர் மாத்திரம், இனிவரும் காலங்களில் இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல்களின் காரணமாக உருவாகியுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேலில் இருந்து வௌியேற வேண்டுமாயின், இலங்கை தொழிலாளர்களுக்கு அதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.