வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது
Related Articles
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய குழுவொன்றின் தலைவரின் பெயரை குறிப்பிட்டு வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கட்டுநாயக்க பகுதியில் நேற்றிரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 வயதான சந்தேக நபர் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் அறையொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து கைப்பேசி மற்றும் அதிகளவான சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.