புத்தளம் – மதுரங்குளியில் சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி – மாம்புரி பிரதேசத்தில் இருந்து குளியாபிட்டிக்கு லொறி மூலம் சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று(10) அதிகாலை மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த லொறி பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது 78 மூடைகளில் சூட்சுமமாக மறைத்து, கடத்த திட்டமிட்டிருந்த சுமார் 2 கோடி பெறுமதியான பீடி இலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குருணாகல் – அலவ்வ பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இயந்திரப் படகு மூலம் பீடி இலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரனைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.