பாடசாலை பஸ் ஒன்று விபத்து – 15 மாணவர்களுக்கு காயம்
Related Articles
இன்று (06) காலை பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் பாடசாலை பஸ்ஸில் பயணித்த சுமார் 15 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கரந்திப்பல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.