இத்தாலியில் மேம்பாலத்திலிருந்து விழுந்த பேருந்து – 20 பேர் மரணம்
Related Articles
இத்தாலியின் வட பகுதியில் வெனிஸ் (Venice) நகருக்கு அருகே நேர்ந்த பேருந்து விபத்தில் 20 பேர் மரணமடைந்தனர் .
மேம்பாலத்தில் சென்ற பேருந்து 15 மீட்டருக்குக் கீழே இருந்த மின்சாரக் கம்பிகளில் விழுந்து தீப்பிடித்தது.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
வழக்கமான பாதையில் சென்ற பேருந்தில் சுற்றுப் பயணிகளும் இருந்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டன.
உயிரிழந்தோரில் உக்ரேன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.
20க்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.