வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் உள்நோயாளிகளை அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
Related Articles
வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக வதிவிட சிகிச்சைக்காக நோயாளர்களை அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது காலை 08 மணி முதல் மாலை 04 மணி வரை மட்டுமே நோயாளர்களை பரிசோதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே பணிபுரிவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு பணியாற்றிய மற்றொரு மருத்துவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தற்காலிகமாக வைத்தியர் ஒருவரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் வைத்தியர் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக நோயாளர்களை அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.