தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளார்கள் – ஜீவன் தொண்டமான்
Related Articles
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இவர்களில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்றவர்கள் என அவர் தெரிவித்தார்.
பல பிரிவுகளில் பணி வெற்றிடம் காணப்படுவதாகவும் , சில பிரிவுகளில் பணியாளர்கள் உபரியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் எண்ணமும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.