2023 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவு
Related Articles
2023 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
1,119 மில்லியன் டொலர்களாக அது பதிவாகியுள்ளது.
ஆனால் அந்த எண்ணிக்கை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஈட்டிய ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடுகையில் 8.7% வீழ்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 8,010 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 10.1% வீழ்ச்சியாகும்.
வெளிநாட்டு சந்தையில் குறிப்பாக தைத்த ஆடைகளுக்கான தேவை குறைந்தமையே ஏற்றுமதி வருமானம் குறைவதற்கான பிரதான காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.