fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2023 16:29

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது.

இதில், அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயில் அறிவிக்கப்படும்.

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் குழுவின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார்.

2023ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்.ஆர்.என்ஏ (mRNA) தடுப்பூசிகளை உருவாக்கியதற்காக’ இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2023 16:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க