பல கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
Related Articles
பல கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அந்தந்த ஆறுகளை அண்மித்து வசிப்பவர்கள், அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகள் மற்றும் புறவழிச்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அந்த கங்கைகளை அண்மித்த பகுதிகளில் மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி ஆற்றின் நீரின் ஓட்டம் தொடர்ந்தும் காணப்படுவதுடன், அவிசாவளையின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் சில இடங்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.