குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
Related Articles
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரத்வல பிரதேசத்தில் குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) காலை இரண்டு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் அதில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய நபர் சூரியவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூரியவெவ, விகாரகல, பிரதேசத்தில் வசித்து வந்த 57 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் மேலும் ஒருவருடன் ஆடிகம ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு ஆற்றை அண்மித்த காட்டுப்பகுதிக்குள் சென்ற போது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.