அதிவேகத்துடன் பயணித்த கார் கவிழ்ந்து விபத்து
Related Articles
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த கார் ஒன்று ஹட்டன் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (29) அதிகாலை 1 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேகமாக பயணித்த கார் கனமழை காரணமாக வழுக்கிச் சென்று வீதிக்கு அருகில் உள்ள மண் மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது சாரதி மாத்திரமே வாகனத்தில் இருந்துள்ள நிலையில் அவருக்கு சிறு காயங்கள் மாத்திரமே ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.