நிர்மாணத்துறை தொடர்ந்தும் மந்தமான மட்டத்தில் செயற்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
Related Articles
நிர்மாணத்துறை தொடர்ந்தும் மந்தமான மட்டத்தில் செயற்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும், ஒகஸ்ட் மாதத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (PMI) இன் படி, நிர்மாணத்துறையானது 47.0 என்ற மொத்த செயற்பாட்டு சுட்டெண் மதிப்பை பதிவு செய்யும் நடுநிலை வரம்பை நோக்கி சென்றுள்ளது.
புதிய ஒடர்களின் தொடர்ச்சியான சரிவின் பிரதிபலிப்பாக, புதிய திட்டங்களின் பற்றாக்குறையானது தொழில்துறையில் கடுமையான பாதகமான தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்துவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் கூடிய கட்டுமானத் திட்டங்களின் மட்டுப்படுத்தப்பட்ட இருப்பு இன்னும் தொழில்துறையில் ஒரு முக்கிய கவலையாக உள்ளது.
முக்கியமாக பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சியின் காரணமாக செப்டெம்பரில் இருந்து திட்டங்கள் கிடைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு நிறுவனங்களிடையே உள்ள உணர்வு நேர்மறையானதாகவே இருந்தது என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.