fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உள்ளூராட்சி அமைப்புகளின் திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2023 15:44

உள்ளூராட்சி அமைப்புகளின் திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்

இடைநடுவில் இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிர்மாணங்களையும் பூர்த்தி செய்யுமாறு பணிப்புரை கிடைத்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

பஸ் நிறுத்தங்களில் சுகாதார வசதிகள் உட்படஉள்ளூராட்சி அமைப்புகளால் பல முழுமையற்ற கட்டுமானங்கள் உள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டங்களுக்கான நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திட்டங்களை நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும், மக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகள் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2023 15:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க