fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நான்கு வயதில் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கட்டாயம் – கல்வியமைச்சர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2023 15:38

நான்கு வயதில் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கட்டாயம் – கல்வியமைச்சர்

இலவசக் கல்வியைக் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி, முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் அதே வேளையில், நான்கு வயதை எட்டும் அனைத்து குழந்தைகளுக்கும் சிறுவயது கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளின் சார்பில் அரசு தலையிட்டு, தேவையின் அடிப்படையில், இடவசதி உள்ள ஆரம்ப பாடசாலைகளில் குழந்தை பருவ வளர்ச்சி மையங்களை நடத்தலாம்.

மூடப்படும் சவாலை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் குழந்தைகளின் முறையான ஆரம்ப குழந்தை பருவ வளர்ச்சியே கல்வி மாற்ற சீர்திருத்தங்களில் வெற்றி பெறுவதற்கான மிக அடிப்படையான படியாகும்.

பாடசாலை சுகாதார ஊக்குவிப்பு மாதத்தை முன்னிட்டு பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2023 15:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க