fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய அமைச்சர்கள் குழு தைவான் சுற்றுபயணம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2023 13:48

சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய அமைச்சர்கள்  குழு தைவான் சுற்றுபயணம்

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் கடந்த 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும் சமீபகாலமாக தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா கருதுகின்றது. மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். தைவானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி மற்றும் செமி-கண்டக்டர் துறை போன்றவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, ஆஸ்திரேலியாவின் பார்லி போன்ற ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-ஆஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது. அதனை மறுசீரமைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அமைச்சர்களின் இந்த பயணத்தால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2023 13:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க