fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2023 15:27

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம்  உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5-ந்திகதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். இதனையடுத்து அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ-வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதுகுறித்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2023 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க