fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு அறிவுறுத்து

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2023 15:16

இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு  அறிவுறுத்து

கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவின் ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார்.

இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்த சம்பவத்தையொட்டி கனடாவில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை அந்நாடு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இரு நாடுகள் இடையே இந்த நடவடிக்கை மேலும் மோதலை அதிகரித்து வருகிறது.

கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இங்குள்ள சிறுபான்மை இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறும் படி காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்தனர். மேலும் கனடா டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிஸ்தான் கொடியுடன் போராட்டம் நடத்திய அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அங்குள்ள இந்து கோவில்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு பாதுகாப்பாக இருந்து வந்தாலும் கனடா அரசு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு சமூகவலைதளம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2023 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க