தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
Related Articles
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் உத்தரவின்படி, இந்த சட்டமூலம் செப்டெம்பர் 22 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை இலக்காகக் கொண்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான நல்லிணக்க அலுவலகத்தை நிறுவுவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.
இந்த அலுவலகம் அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் மற்றும் அமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இவர்களின் பதவிக்காலம் 03 வருடங்களாகும்.
அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும், அது அமைச்சரின் பரிந்துரையின் பேரில் செய்யப்பட வேண்டும்.
நல்லிணக்க அலுவலகத்தின் முக்கியப் பணியானது, தேசிய ஒற்றுமைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பல்வேறு சமூகங்களுக்கிடையில் உள்ள பதட்டங்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும் அரசாங்கத்திற்கு நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதாகும்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு போன்ற மோதலுக்குப் பின்னரான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நல்லிணக்க அலுவலகம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லிணக்க அலுவலகத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு ஒரு செயலகம் நிறுவப்பட வேண்டும் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டும்.
அலுவலகத்திற்கு தவறான தகவல்களை அளித்து, அதன் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய இந்த சட்டமூலம் அனுமதி அளித்துள்ளது.