ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான இறுதி கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதற்கமைய இலங்கை அணிக்கு 117 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.