fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யுரேனிய சேகரிப்பை குறைத்துவரும் ஈரான்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2023 11:24

யுரேனிய சேகரிப்பை குறைத்துவரும் ஈரான்

அணு சக்தியை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு. மேற்காசிய நாடான ஈரான், அணு சக்தியை அமைதி வழிக்கே பயன்படுத்துவதாக தெரிவித்து வந்தது. ஆனால், சர்வதேச அணு சக்தி அமைப்பு இதனை ஏற்க மறுத்தது.

தேவைப்பபட்டால் உடனடியாக அணு ஆயுதங்களை உருவாக்கி கொள்ளும் வகையில் போதுமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் சேமித்து வைத்துள்ளதாக இந்த அமைப்பு கூறி வந்தது. 2015-இல் உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிகபட்சமாக 202.8 கிலோகிராம் அளவு யுரேனியம் மட்டுமே அந்நாடு சேகரித்து வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது.

உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறும் விதமாக சில வருடங்களாக அந்நாடு செயல்பட்டு வந்தது. இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. சமீபத்தில் இதை தணிக்கும் விதமாக இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதன்படி, இரு நாட்டின் சிறைகளிலும் உள்ள தங்கள் நாட்டு கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும், தென் கொரிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட ஈரானுக்கு சொந்தமான பல நூறு கோடிகளை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்பு கொண்டால், ஈரான் தனது அணு ஆயுத முயற்சிகளை மட்டுப்படுத்தி கொள்வதாக கூறி இருந்தது.

இந்நிலையில், ஈரானின் அணு சக்தி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் சர்வதேச அணு சக்தி அமைப்பு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் 87.5 கிலோகிராம் எனும் அளவிலும், பிறகு மே மாதம் 114 கிலோகிராம் எனும் அளவிலும் இருந்த 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய சேகரிப்பு, தற்போது 121.6 கிலோகிராம் எனும் அளவிலேயே உள்ளது.

ஆக யுரேனிய சேகரிப்பை ஈரான் குறைத்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒரு அணு ஆயுதத்தை பரிசோதனை செய்ய தேவைப்படும் எந்தவிதமான அணு ஆயுத நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவு அமைப்புகள் கடந்த மார்ச் மாதம் கூறி வந்தன. ஆயுத மட்ட அளவிலான யுரேனியம் என்பது 90 சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். 60 சதவீதம் செறிவுட்டப்பட்ட யுரேனியம், இதிலிருந்து சற்றே குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2023 11:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க