நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு நேற்றும், இன்றும் மூடப்பட்டுள்ளது.
பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் அறிவுரைக்கு அமைய மருந்துகளை பயன்படுத்தி உண்ணிகளை அழிக்கும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு பாடசாலை மூடப்படுவதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.